ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து பிரபல சுபி பாடகர் பலி..!
 

 
மன்மீத் சிங்

ஆற்று நீரில் ஓடும் வெள்ளப்பெருக்கை நண்பர்களுடன் காணச்சென்ற போது மழை நீரில் வழுக்கி விழுந்த பிரபல பாடகர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மன்மீத் சிங் சுபி பாடல்கள் பாடுவதில் புகழடைந்தவர். தேசியளவில் பிரபலமான ஜெயின் பிரதர் இசைக்குழுவிலும் இடம்பெற்று பாடல்கள் பாடி வந்தார்.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்திலுள்ள தர்மசாலாவுக்கு நண்பர்களுடன் மன்மீத் சிங் சுற்றுலா சென்று இருந்தார். அங்கு மழைப் பொழிவு இருந்து வருவதால் கரேரி என்கிற ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை நண்பர்களுடன் காணச்சென்றுள்ளார்.

மன்மீத் சிங் நண்பர்களுடன் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மழைநீரில் வழக்கு ஆற்றுக்குள் விழுந்தார். இந்த சம்பவத்தில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி அவர் பலியானார்.

அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்ற போது முடியாமல் போனது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீவிர தேடுதலுக்கு பிறகு கங்கரா மாவட்டத்தின் ஆற்றின் கரையோரத்தில் மன்மீத் சிங் உடல் மீட்கப்பட்டது.
 

From Around the web