குறட்டைக்கு மருந்து கண்டுபிடித்த பிரபல தமிழ் நடிகர்..!

தொழிலதிபரும் நடிகருமாகிய ஆர் கே இவர் அவன் இவன், புலிவேசம் ,ஜில்லா ,வைகை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் மிகவும் உணர்வு பூர்வமாக நடித்துள்ளார். நடிப்பை விடுத்து மேலும் பல பணிகளில் சிறந்து விளங்கும் இவர் தற்போது ஒரு முக்கிய பிரச்சினைக்கு மருந்து கண்டு பிடித்துள்ளார்.
பெரும்பாலான பேருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்றான இரவில் குறட்டை இதனால் அநேகமானவர்கள் விவாகரத்து வரைக்கும் சென்றிருப்பார்கள் மற்றும் பலர் மரணித்தும் இருக்கின்றனர். குறித்த மருந்து குறித்த விளக்கத்தினை நடிகர் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் மருந்து குறித்து "நிறைய பேர் நைட்ல தூங்கும்போதே செத்துப் போயிடறாங்க, காரணம் என்னவென்றால் குறட்டை தான். குறட்டைக்கு நான் மருந்து கண்டுபிடித்து இருக்கேன். உலகத்திலேயே அந்த மருந்து கிடையாது. உங்க எல்லாருக்கும் இலவசமா தரேன். 7 நாள் தொடர்ந்து உச்சந்தலையில தடவுங்க. குறட்டை 0% வராது" கூறியுள்ளார்.