பிரபல தமிழ் நடிகரின் மகளுக்கு திருமணம்.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!!

 
1

 சூர்யா நடிப்பில் வெளியான ‘நந்தா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கருணாஸ். இந்தப் படத்தில் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியல் பிரபலமானார். தொடர்ந்து வில்லன், திருடா திருடி, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால் இவர் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், இவர் ஹீரோவாகவும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ஆதார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதனிடையே அரசியல் ஆர்வம் ஏற்பட முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக ஆனார். 

Karunas

சமீபத்தில் கருணாஸ், சங்கத்தலைவன், விருமன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார். கருணாஸ் மனைவி கிரேஸ் ஒரு பின்னணி பாடகி என்பதும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். இந்த தம்பதியனருக்கு கென் கருணாஸ் என்ற மகனும், டயானா என்ற மகளும் உள்ளனர்.

இவரது மகன் கென் 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ படத்தில் சிதம்பரம் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். கென் கருணாஸின் நடிப்பு பலரது பாராட்டுதலை பெற்றது. அடுத்ததாக தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். 

இந்நிலையில், கருணாஸ் மகள் டயானாவின் திருமணம் சமீபத்தில் நடந்தது. டாக்டருக்கு படித்துள்ள டயானாவின் திருமண புகைப்படங்களை அவரது சகோதரர் கென் கருணாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில், “இனிய திருமண வாழ்த்துகள் அக்கா & மாமா” என கென் கருணாஸ் குறிப்பிட்டு இருந்தார். மேலும் மணமக்களுடன் கருணாஸ் அவரது மனைவி கிரேஸ் மற்றும் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படத்தையும் கென் பகிர்ந்தார். இந்த நிலையில் டயானாவின் திருமணம் தொடர்பான புதியப்புகைப்படங்களை வெளியாகியுள்ளன.

From Around the web