சாலை விபத்தில் சிக்கி பிரபல தெலுங்கு நடிகர் கவலைக்கிடம்..!

 
சாய் தரம் தேஜ்

இருசக்கர வாகனம் ஓட்டி நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் நடிகர் சிரஞ்சீவியின் உறவினரும் நடிகருமான சாய் தரம் தேஜ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகரான சிரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரரின் மகன் சாய் தரம் தேஜ். இவரும் தெலுங்கு சினிமாவில் கவனிக்கத்தக்க படங்களில் நடித்துள்ளார்.

நேற்று ஹைதராபாத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்குள்ள கேபிள் பாலத்தில் அவர் சென்ற போது, அவருடைய சூப்பர்பைக் நிலைதடுமாறியது.

இதனால் ஏற்பட்ட விபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

From Around the web