பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் ரெய்டு..! போலீசார் குவிப்பு..!  

 
1

சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலம் அடைந்த நடிகை தான் ஜெயிலட்சுமி.இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டம் என பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாடலாசிரியர் சினேகன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேஷன் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறேன்.சமீப காலமாக இணையதளங்களில் எனது பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபடுவதாக தகவல் வந்தது.

இது தொடர்பாக விசாரித்தபோது, சமூக வலைதளப்பக்கத்தில் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரை பயன்படுத்தி ஜெயலட்சுமி என்பவர் பண வசூலில் ஈடுபட்டது எங்களுக்கு தெரியவந்தது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். 

மேலும் தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி சினேகன் வழக்குத் தொடுத்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

From Around the web