சாலை விபத்தில் காருடன் கவிழ்ந்து பிரபல நடிகை உயிரிழப்பு..!!

வருங்கால கணவருடன் மணாலிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை வைபவி உபாத்யா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
tv actress

இந்தி மொழியில் ஒளிபரப்பான சாராபாய் vs சாராயாபாய் தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபாத்யா (30). இவர் ஒருசில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தீபிகா படுகோனுடன் சபக் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானார். 

இவருக்கும் ஜெய் காந்தி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இருவரும் மணாலிக்கு காரில் செல்ல முடிவு செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை பஞ்சர் என்கிற மலைப்பகுதியில் கார் சென்றபோது, கட்டுப்பாடு இழந்து வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் நடிகை வைபவி உபாத்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனிருந்த ஜெய் காந்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான ஹிமாச்சல பிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

வைபவியின் மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடல் நாளை மும்பை கொண்டுவரப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

From Around the web