கமலின் விக்ரம் படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்..!

 
விக்ரம் படத்தில் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தில் பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கிடையில் அவர் தலைவராக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அதற்கான தீர்வுகளை உருவாக்கும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இடையில் கொரோனா ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கட்சியை சீரமைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார். இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட விக்ரம் படத்திற்கான பணிகளையும் அவர் கவனித்து வருகிறார்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் இதற்கான ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழு விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web