ஆஸ்கர் விருது விழாவில் ஆடையின்றி வந்த பிரபல WWE வீரர்..! 

 
1

ஹாலிவுட் நடிகர் ஜான்சீனா ஆஸ்கர் விருது விழாவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக வந்தது வைரலாகியுள்ளது.

ஆஸ்கர் விருது விழாவில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார். அப்படியாக சிறந்த ஆடை அலங்காரத்திற்கான விருதை வழங்க பிரபல WWE வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான்சீனா அழைக்கப்பட்டார்.

அப்போது விருது அறிவிக்க வேண்டிய அட்டையை வைத்து கீழே அந்தரங்க பாகத்தை மட்டும் மறைத்துக் கொண்டு நிர்வாணமாக மேடையில் வந்து பேசினார் ஜான்சீனா. இதை பார்த்தும் ஹாலிவுட் பிரபலங்களிடையே பெரும் சிரிப்பலை எழுந்தது. பின்னர் பேசிய அவர் ஆண்கள் உடல் நகைச்சுவைக்கானது அல்ல என்று பேசினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மரியாதையான ஒரு விருது விழாவில் ஜான்சீனா இவ்வாறு நடந்து கொண்டது தவறு என்று பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


 


 

From Around the web