நடிகைக்கு கல்லீரல் தானம் செய்யும் ரசிகர்!!

 
1

திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை கேபிஏசி.லலிதா. இவர் தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, ‘காற்று வெளியிடை’, ‘அலைபாயுதே’, ‘உள்ளம் கேட்குமே’, ‘கிரீடம்’, ‘மாமனிதன்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் இவருக்கு வயது 73.

இயக்குநர் பரதனின் மனைவியான இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு அவரது மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது.
லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அவருடைய மகள் குட்டி என்பவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை பார்த்த லலிதாவின் தீவிர ரசிகரான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார்.இதுகுறித்து கலாபவன் சோபி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய தயாராக உள்ளேன். மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளேன். 54 வயதான எனக்கும் லலிதாவுக்கும் ஒரே குரூப் ரத்தம். மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ கிடையாது. கண்டிப்பாக எனது கல்லீரல் அவருக்குப் பொருந்தும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

From Around the web