மீண்டும் மனைவியை விவகாரத்து செய்கிறாரா விஷ்ணு விஷால்..??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவருடைய நடிப்பில் அண்மையில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் விக்ராந்த் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதில் “நான் மீண்டும் முயற்சி செய்தேன். ஆனால் தோற்றுவிட்டேன். இது எனக்கு ஒரு படிப்பினை. முன்னே நடந்தது தோல்வி கிடையாது, அதில் தவறும் இல்லை. துரோகம், ஏமாற்றுதல் ஆகும்” என்று அவர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும், “மீண்டும் நீங்கள் விவகாரத்து செய்யவுள்ளீர்களா?” என்று வினவியுள்ளனர். இதையடுத்து உடனடியாக தனது பதிவை விஷ்ணு விஷால் நீக்கிவிட்டார். இது ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.