ரசிகர்கள் ஏமாற்றம்..! மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் கோட் டிரைலர்..!
தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கோட் படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான போதும் அதில் இடம்பெற்ற மெலோடி பாடலைத் தவிர மற்ற இரண்டு பாடல்களும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. அதிலும் இறுதியாக வெளியான ஸ்பார்க் பாடல் படு விமர்சனத்திற்கு உள்ளானது.
பொதுவாக விஜய் படத்தில் வெளிவரும் பிஜிஎம் பாடல்கள் எப்போதும் ரசிகர்களை கவரும் வரையிலே காணப்படும். ஆனால் இந்த முறை சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோட் படத்தின் டிரைலர் எவ்வாறு வரப் போகின்றது என்ற அச்சம் ரசிகர்களுக்கு கேள்விக் குறியாகவே காணப்படுகிறது.
கோட் படத்தின் டிரைலர் சுதந்திர தினம் அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோட் படத்தின் டிரைலர் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கோட் படத்தின் அப்டேட் நாளைக்கு வெளியாகும் எனக் கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
I promised a Trailer launch date today. We are still working on bringing the best version to you ❤️🤗 So here is a small treat for Waiting to see our #Thalapathy on screen very soon #ThalapathyFansForever ❤️#GOAT pic.twitter.com/HhY5Dn2u5u
— Archana Kalpathi (@archanakalpathi) August 14, 2024