சோகத்தில் ரசிகர்கள்..! பிரபல கொரிய நடிகை Kang Seo Ha காலமானார்...!
Jul 16, 2025, 07:35 IST

இளம் நடிகை Kang Seo Ha தனது திறமையான நடிப்பின் மூலம் கொரிய திரையுலகில் தனக்கென ஒரு நிலையை உருவாக்கியிருந்தார். குறிப்பாக, "Schoolgirl Detectives," "Assembly," "First Love Again," "Through the Waves," "The Flower in Prison" மற்றும் "Heart Surgeons" போன்ற வெற்றிகரமான Dramas மூலம் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
Kang Seo Ha கடந்த சில ஆண்டுகளாக தனக்குள்ள ஆரோக்கியப் பிரச்சனைகளை வெளிக்கொணராது, அமைதியாக சிகிச்சை பெற்றுவந்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால், அவரது உடல் நிலை அண்மையில் மோசமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
இவரது இறுதி சடங்கு நாளை (ஜூலை 16) மாலை சியோலில் நடைபெற உள்ளது. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அஞ்சலிக்கான நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.அவரது திடீர் மறைவு திரைத்துறையிலும், அவரது ரசிகர்களிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருடைய புகைப்படங்களுடன் தனது இரங்கல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.