ரசிகர்கள் ஷாக்..! சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை திரிஷா ?

விடாமுயற்சி ,குட் பேட் அக்லி ,சூர்யா 45 போன்ற பல படங்களில் நடித்து வருகின்றார் நடிகை திரிஷா. 41 வயதிலும் மிகவும் இளமையாக இருக்கும் இவர் நயன்தாராவிற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருகின்றார்.
இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் சினிமாவில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவரது அம்மாவிடம் கூறியதாகவும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகின்றது.அதாவது அவர் பெரும்பாலான பணத்தினை நடித்து சம்பாதித்துள்ளதாகவும் இனி வரும் காலங்களில் ஒய்வு எடுத்து வாழ்க்கையை அனுபவிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்பொழுது ஏராளமான பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.இவரது இந்த முடிவை கேள்விப்பட்ட இயக்குநர்கள் என பலரும் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும் மற்றும் நடிகை அவர்கள் இன்னும் இது தொடர்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.