அதிர்ச்சியில் ரசிகர்கள்..! மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் கார்..!

 
1

நடிகர் அஜித் குமார், தற்போது இத்தாலியில் நடைபெறும் GT4 ரேஸிங் கார் போட்டியில் பங்கேற்று உள்ளார்.மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொண்டிருந்த இந்த ரேஸில், திடீரென விபத்து ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

GT4 ரேஸிங் போட்டி தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த ரேஸர்கள் பங்கேற்றிருந்தனர். அஜித் இந்த போட்டியில், தனது குழுவுடன் பங்கேற்று, புதிய அனுபவங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், பந்தய திடலில் அவருக்கு முன்பாக சென்ற கார் திடீரென தடத்தில் நிற்க நேர்ந்தது. அதனால், அஜித்தின் கார் அந்த காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

அஜித்தின் விபத்து செய்தி வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் #ThalaAjith, #StaySafeAjith போன்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாக தொடங்கின. அந்த சூழ்நிலையில், இந்த விபத்து பல ரசிகர்களை ஒரு சில நிமிடங்களுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

From Around the web