ரசிகர்கள் ஷாக்..! 'லவ் மேரேஜ்' படம்.. ஓடிடியில் வெளியானது.. ஆனால் இந்தியாவில் இல்லை..!   

 
1

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக வெளியான லவ் மேரேஜ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.'அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இந்த படத்தை இயக்கி இருந்தார் இதில் மம்முட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இத்திரைப்படம் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் திரைப்படம் இந்தியாவிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web