ரசிகர்கள் ஷாக்..! பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி..!
Mar 5, 2025, 05:45 IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியவர் கல்பனா(44). டிவி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இவரது தந்தை டி.எஸ்.ராகவேந்திராவும் தமிழ்ப்பட நடிகர் ஆவார். என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.
இந்நிலையில், இன்று( மார்ச் 04) தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்பனாவை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.