ரசிகர்கள் அதிர்ச்சி..! கமல் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை எரிக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்! 

 
1

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பட்டியல் இன மக்களை இழிவு படுத்தியதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இவர்களின் உருவ படங்களை எரிக்க முயன்ற கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.     

அப்போது அவர்களின் உருவப்படங்களை செருப்பினால் அடித்து, அந்த படங்களை கிழித்து, எரிக்க முயன்றனர். ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த போலீசார் அவர்களின் செயல்களை தடுக்க முயன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்துள்ளனர்.    

From Around the web