அதிர்ச்சியில் ரசிகர்கள்..! முடிவுக்கு வந்த மூன்று முக்கிய சீரியல்கள்..!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றன. இதில் நடிக்கும் நடிகை, நடிகர்களும் மக்களிடம் பரிச்சயமாக உள்ளார்கள்.
புதிய களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியகளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளன. அதிலும் சமீப காலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகளைத் தாண்டி இளவட்ட ரசிகர்களும் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மூன்று முக்கிய சீரியல்கள் ஒரே நாளில் முடிவுக்கு வரவுள்ளது. அது பற்றிய விபரங்களை பார்ப்போம்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல சீரியல் கிட்டத்தட்ட 1134 எபிசோட்க்களை கடந்து முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியல் கடந்த நான்கு வருடமாக ஒளிபரப்பாகி வருகின்றது. TRP ரேட்டிங்கில் முதல் ஐந்து லிஸ்டில் இடம்பிடித்து வந்த இந்த சீரியல், திடீரென முடிவுக்கு வந்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்திரா சீரியலும் முடிவுக்கு வருகின்றது. இது ரொமான்டிக் ட்ராமாவாக எடுக்கப்பட்ட இந்த சீரியல் பல தடைகளை தாண்டி காதலில் இணைந்த இரு நெஞ்சங்கள் சந்திக்கும் பிரச்சினையை விறுவிறுப்பான கதைகளத்துடன் காட்டியிருப்பார்கள். இந்த சீரியலும் இரண்டு வருடங்களை நிறைவடைவதற்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளது.
அத்துடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றொரு முக்கிய சீரியல் தான் சண்டைக்கோழி. இந்த சீரியலும் ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஹீரோயின், ஹீரோயினுக்கு இடையில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை வரும் நிலையில் சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்கின்றார்கள். அதன் பிறகு இருவரும் எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்? மனதால் காதலிக்க தொடங்கினார்களா? என்பதை விறுவிறுப்பான கதை அம்சத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் மோசமான சரிவை சந்தித்தலால் இந்த சீரியலும் முடிவுக்கு வந்துள்ளது.