”தனுஷ் இப்படி பண்ணூவார்னு நினைச்சுக் கூட பார்க்கல” கர்ணனை கொண்டாடும் ரசிகர்கள்..!

 
”தனுஷ் இப்படி பண்ணூவார்னு நினைச்சுக் கூட பார்க்கல” கர்ணனை கொண்டாடும் ரசிகர்கள்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அசுரன் படத்தைப் போலவே இந்த படமும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வாரி குவிக்கும் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படம் நாடு முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மலையாள சினிமாவைச் சேர்ந்த ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் லால், கவுரி கிஷன், லக்ஷ்மி ப்ரியா சந்திரமவுலி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது.

தனுஷ் ரசிகர்களை தாண்டி இந்த படம் பலரையும் கவர்ந்துள்ளது. படம் பார்த்த பல தரப்பினரும் சமூகவலைதளங்களில் கர்ணன் படத்தை பாராட்டியும், இயக்குநர் மாரி செல்வராஜுக்குவ் வாழ்த்து தெரிவித்தும், தனுஷின் நடிப்புக்கு புகழாரம் சூட்டியும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஒரு காட்சியில் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தின் டீ ஷர்ட்டை அணிந்தவாறு ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். அவர் இந்த டீ ஷர்ட் அணிந்த காரணம் என்ன என்பதை நீங்களும் திரையரங்களுக்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள். 

From Around the web