ரசிகர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க..! மாஸ் காட்டவுள்ள அந்த 150 வினாடிகள்..!
 

 
1
 'இந்தியன் 2’ படம் பார்க்க செல்பவர்களுக்கு ’இந்தியன் 3’ படத்தின் டிரைலர் இன்ப அதிர்ச்சியாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த ட்ரெய்லர் 150 வினாடிகள் ரன்னிங் டைம் ஆக இருக்கும் என்றும் இடைவேளையின் போது இந்த ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் 'இந்தியன் 3’ திரைப்படம் சேனாதிபதியின் அப்பா கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ’கோட்’  படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் இடைவேளையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மொத்தத்தில் ’இந்தியன் 2’ படம் பார்க்க செல்பவர்களுக்கு 'இந்தியன் 3’ திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்படுவது உறுதி என்று கூறப்படுவதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

From Around the web