தொடர்ந்து ஏமாற்றும் அஜித்- மே 1-ம் தேதி தீர்வு வருமா..??

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து சலித்துப் போய்விட்டனர். அப்படிப்பட்ட அறிவிப்பு வருவதற்கான அறிகுறி எதுவும் இப்போதைக்கு தெரியவில்லை.
 
ajith

பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் வெளியானது. ஹெச். வினோத் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பதிவு செய்தது. ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதகா தயாரிப்பாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எழுதிய கதை லைக்கா நிறுவனத்துக்கும் அஜித்துக்கும் பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவன், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சமீபத்தில் சமூகவலைதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த தகவலை விக்னேஷ் சிவன் உறுதி செய்தார். அதேசமயத்தில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளது மகிழ் திருமேனி என்கிற தகவலையும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். ஏறத்தாழ அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் துணிவு படம் வெளியாகி 3 மாதங்கள் கடந்துவிட்டது. இன்னும் அஜித்தின் புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. ஏன் இப்படியொரு தாமதம் ? என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ படங்கள் ஒன்றாக தான் வெளியாகின. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கமிட்டாகி விஜய் ‘லியோ’ பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். அதனுடைய ரிலீஸ் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அஜித் படத்துக்கு இன்னும் பூஜை கூட போடவில்லை. இது அஜித் ரசிகர்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

இதற்கிடையில் வரும் மே 1-ம் தேதி அஜித் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அப்போதாவது அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகுமா என்று ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருகின்றனர். 
 

From Around the web