கேரளாவில் கில்லி படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்..!

 
கில்லி படம்

கேரளாவிலுள்ள திரையரங்கத்தில் மீண்டும் கில்லி படம் ரிலீஸ் செய்யப்பட்டத்தை அடுத்து ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதை தேசியளவில் கவனமீர்த்துள்ளது.

கொரோனா பரவல் பிரச்னையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகளவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக அங்குள்ள திரையரங்குகள் எதுவும் இயங்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை கொண்டு வரும் நோக்கில், கில்லி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் கூட்டமாக கூட்டமாக வந்து ரசிகர்கள் குவிந்து கில்லி படம் பார்த்துள்ளனர்.

From Around the web