ஓடிடியில் வெளியாகும் மல்டி ஸ்டார் படம்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

 
கற்க கசடற திரைப்படம்

சிம்புதேவன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர், ரெஜீனா, சாந்தனு, விஜியலக்ஷ்மி, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள கற்க கசடற திரைப்படம் ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கற்க கசடற’. இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பின்பும், கொரோனா பிரச்னையால் இந்த படம் இதுவரை வெளியாகமல் உள்ளது. இதனால் தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஜிப்ரான், சாம் சி.எஸ். சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் என 6 இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

கற்க கசடற படத்தில் மொத்தம் 6 முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கற்க கசடற படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web