குஷியில் ரசிகர்கள்! ‘கங்குவா’ படம் குறித்து வெளியான புதிய அப்டேட்..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படம் 9ம் நூற்றாண்டில் தொடங்கி 21ம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் கதை எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 23ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது.
Each scar carries a story!
— Studio Green (@StudioGreen2) July 20, 2023
The King arrives 👑#GlimpseOfKanguva on 23rd of July! @Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @StudioGreen2 @kegvraja @UV_Creations @saregamasouth@KanguvaTheMovie #Kanguva 🦅 pic.twitter.com/CV5iktmMHG
இந்த திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேறு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.