சோகத்தில் ரசிகர்கள் !பிரபல ஹிட் சீரியலுக்கு என்ட்டு கார்டு..!!

 
1

ஜீ தமிழ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘ரஜினி’. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற ‘அனுகிரஹம்’ என்ற சீரியலில் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வந்தது. தற்போது 650 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. 

rajini

இந்த சீரியலில் நடிகை ஸ்ரேயா, அருண் கிரைசர் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்ரீலேகா பார்த்தசாரதி, பாப்பி மாஸ்டர், ஆண்ட்ரூஸ் ஜேசுதாஸ், சுபிக்‌ஷா, கயாரோஹணம், ஹேமந்த்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை எஸ்.எஸ்.சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். 

இந்த சீரியலில் ரஜினி, பார்த்திபன் இருவரும் பிரிய போவதாக சொல்லி வரும் நிலையில் இருவரும் சேர வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நேரத்தில் ரஜினி சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி நகர்வதாக ஷாக் ப்ரோமோ வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 ரஜினி பார்த்திபன் இருவரும் பிரிய உள்ள நிலையில் அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்கின்றனர். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ரஜினி செய்த விஷயங்களை சொல்லி கண் கலங்குகின்றனர்.

இதுவரை வில்லியாக இருந்து வந்த ராதிகாவும் கண் கலங்கி கண்ணீர் விட்டு மயங்கி விழுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ப்ளீஸ் ரஜினி சீரியலை முடிக்காதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web