இன்று முதல் துவங்கும் பிக்பாஸ் புதிய சீசன்- உற்சாகத்தில் ரசிகர்கள்.!

 
பிக்பாஸ் தமிழ் சீசன் 5

தெலுங்கு தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் புதிய சீசன் இன்று முதல் துவங்குகிறது.

சர்வதேசளவில் பெயர் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிக்பாஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல தெலுங்கில் தயாரிக்கப்படும் இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

அதன்படி புதியதாக தயாரிக்கப்படும் பிக்பாஸ் சீசன் 5 தெலுங்கு நிகழ்ச்சி இன்று முதல் துவங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசனை போலவே இந்த சீசனையும் நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 5 தெலுங்கு இன்று 6 மணி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஒளிப்பரப்பு துவங்கப்படும் என தெரியவந்துள்ளது.
 

From Around the web