ரசிகர்கள் அதிர்ச்சி..!! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா பிரியங்கா..?

 
1

பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த சீசனுக்கான இறுதி நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் , தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல்நலக்குறைவு காரணமாக பிரியங்கா வெளியேறி இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மீதமுள்ள ராஜு, பிரியங்கா, சிபி, நிரூப், பாவனி ஆகிய ஆறு பேரில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.இதில் ராஜு அல்லது பிரியங்கா இருவரில் ஒருவர் கட்டாயம் பிக்பாஸ் வெற்றியாளராவார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web