கனியின் திருமண புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்..!

 
கனி திரு

குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றியாளர் கனியின் திருமண புகைப்படம் இணையதளங்களில் வெளியான நிலையில், அதை பார்க்கும் ரசிகர்கள் பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற கனி திரு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து தமிழகத்தின் தொலைக்காட்சி பிரபலங்களில் ஒருவராக மாறினார் கனி.

பிரபல இயக்குநர் அகத்தியனின் மகனான கனி ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தார். தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், சானக்யா போன்ற படங்களை இயக்கிய திரு-வை அவர் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதை பார்க்கும் ரசிகர்கள் பலர் திருமணத்தின் போது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் கனி என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கனி கணவர் திரு இயக்கிய படங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். தவிர, சிவகார்த்திகேயன் நடித்த ‘எங்கள் வீட்டு பிள்ளை’ படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web