கழுவி ஊற்றும் ரசிகர்கள்..! சாச்சனாவை கேள்வி கேட்காமல் பாதுகாக்கிறாரா விஜய் சேதுபதி..!
இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
இதை தொடர்ந்து ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
எனினும் தற்போது வரையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் இறுதியாக ரியா தியாகராஜனும் வெளியேறி இருந்தார்கள். இந்த வாரம் வர்ஷினி வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி மஞ்சரியிடம் ஷாப்பிங் எப்படி இருந்தது என்று கேட்கின்றார்.
அதற்கு மஞ்சரி பதினோறாயிரம் சம்பாதிச்சோம் ஆனா அத விட்டது ஈஸியா தெரியல என்று சொல்லுகிறார். இதனால் அதுக்கு சாச்சனா தான் காரணம் என்று எப்போ தெரிய வந்துச்சு என கேட்கிறார்.
மேலும் சாச்சனாவிடம் என்னமா சொன்னாங்க சௌந்தர்யா என கேட்கிறார். அதற்கு அவங்களுக்கு ஒரு மைண்ட் செட் இருக்கு நான் ஆர்வக்கோளாறு, அதிக பிரசங்கி என்று சொல்ல, அப்படி என்றால் ஈஸியா அவங்க மேல பழி போட்டுட்டீங்களா என சௌந்தர்யாவிடம் கேட்கிறார்.
இவ்வாறு விஜய் சேதுபதி கேட்டதும் சாச்சனாவை கேள்வி கேட்காமல் பாதுகாப்பதும் ரசிகர்களை கடுப்புக்குள் உள்ளாக்கி உள்ளது.