புஷ்பா பட ரகசியங்களை வெளியிட்ட ஃபகத் பாசில்..!
 

 
ஃபகத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா படம் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்கும் ஃபகத் பாசில், தன்னுடைய கதாபாத்திரம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரமாண்டமாக தயாராகி வரும் படங்களுள் ஒன்று புஷ்பா. இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இது தயாராகி வருகிறது. செம்மரக் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநராக நடிக்கிறார் அல்லு அர்ஜுன்.

மேலும் இந்த படத்தில் மிகுந்த மிரட்டலான வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதுகுறித்து சமீபத்தில் மனம் திறந்த அவர், புஷ்பா படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இன்னும் எனக்கான படப்பிடிப்பு துவங்கவில்லை. எனினும் இரண்டாவது பாகத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய இரண்டாவது பாகம் 2023-ம் ஆண்டில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதியாக கூறவில்லை.

பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 

From Around the web