ஃபகத் பாசில் படங்களுக்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
ஃபகத் பாசில் படங்களுக்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி..!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும் தேசிய விருது வென்றவருமான ஃபக்த் பாசில் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து நடைமுறை செய்துள்ளன. இதனால் குறிப்பிட்ட மாநிலங்களில் திரையரங்குகளில் இரவுநேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இங்குள்ள திரையரங்குகளில் வெறும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய என பல்வேறு மொழிப் படங்களில் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. மலையாள சினிமாவில் ஃபகத் பாசில் நடித்த படங்கள் அதிகளில் ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி-யில் ரிலீஸாகி மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

கேரளா மற்றும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகம் இருந்தாலும் திரையரங்கங்கள் செயல்பாட்டி தான் உள்ளன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு ஃபகத் பாசில் படங்கள் ஓ.டி.டி-யில் வெளியாவது திரையரங்க உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவர் நடிக்கும் படங்களை திரையரங்கில் திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் பகத் பாசில் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web