விக்ரம் படத்தில் ஃபகத் பாசில் போலீஸா..? இல்லை அரசியல்வாதியா..?

 
ஃபகத் பாசில்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்திற்கான பணிகளில் இறங்கவுள்ளார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விக்ரம் படத்தில் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஊழல் மிகுந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அதே சமயத்தில் இந்த படத்தில் நடிகர் ஃபகத் அரசியல்வாதியாகவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் படத்தில் அவருடைய கதாபாத்திரம் தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
ஷூட்டிங் துவங்கிய பிறகு இதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம்.

மேலும் படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளாராம். அனிருத் இசையமைக்கும் இந்த படம் முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லராக தயாராகவுள்ளது. 

From Around the web