நல்ல செய்தி சொன்ன ரவீந்தர் - மகாலட்சுமி..!! இவ்வளவு சீக்கரமா..??

 
ravinder
அண்மையில் திருமணம் செய்து கொண்ட ‘ஃபேட் மேன்’ ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி இருவரும் ஒரு நல்ல செய்தி கூறியுள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம்.

சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்துகொண்ட செய்தி நெட்டிசன்கள், தொலைக்காட்சி பார்வையாளர்கள் என பலரையும் ஆச்சரியமடையச் செய்தது. இவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது? எவ்வாறு திருமணம் முடிந்தது? என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுந்தன.

இவர்களுடைய திருமணப் புகைப்படங்கள் வெளியாகும் வரை, இருவரும் காதலித்து வந்த செய்தி யாருக்குமே தெரியாது. எனினும் இவ்விருவருக்குமே இது மறுமணமாகும். குடும்பத்தினரின் ஒப்புதலை பெற்று ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருப்பதியில் நடந்தது.

vj mahalakshmi

அதை தொடர்ந்து இருவரும் தம்பதியாக பல யூ-ட்யூப் சேனல்களை சந்தித்து, தங்களுடைய காதல் கதை மற்றும் திருமணம் குறித்த தகவல்களை வெளியிட்டனர். அவ்வணைத்துக்குமே நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் திருமணமான சில மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், வீட்டில் விசேஷம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தங்களுடைய வீட்டில் நல்லது நடக்க வேண்டிய சண்டி ஹோமம் நடந்துள்ளதாகவும், அனைவரும் நலம் பெற வேண்டி இப்பூஜை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

From Around the web