இணையத்தில் புடவைகளை விற்கும் பாத்திமா பாபு..!  ஒரு புடவை 500 ரூபாய் தான்..! 

 
1

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமான ஃபாத்திமா பாபு, அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’ கல்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்த அவர்  பல டெலிவிஷன் சீரியல்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லட்சுமி, யாரடி நீ மோகினி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஃபாத்திமா பாபு, 14 நாட்களில் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா பாபு தற்போது தான் ஒரே ஒருமுறை மட்டும் உடுத்திய, ஆயிரக்கணக்கான புடவைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த புடவை விற்பதால் கிடைக்கும் காசை வைத்து ஏழை எளிய குழந்தைகளுக்கு படிப்பு செலவு செய்யப்போவதாகவும்,  குழந்தைகள் இல்லத்திற்கு செலவு செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

பாத்திமா பாபு தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான அழகான டிசைன்கள் கொண்ட புடவைகளை வெறும் ரூ.500 முதல் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி உள்ள நிலையில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிசைன் டிசைனாக இருக்கும் காட்டன், பட்டு புடவைகள் கூட 600 ரூபாய்க்கு தான் அவர் விற்பனை செய்கிறார்.  இதை அடுத்து ஏராளமான பெண்கள் இந்த புடவைகளை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. பழைய சேலைகளை விற்பது ஒரு நெருடலை ஏற்படுத்தினாலும் அந்த பணத்தில் ஒரு நல்ல காரியத்தை அவர் செய்யப் போகிறார் என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

From Around the web