ஃபேட்மேன் ரவீந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவு..!!

அண்மையில் மனைவி மகலாட்சுமியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரவீந்தர், தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 
fatman ravindar

திரைப்பட தயாரிப்பாளரும், சமூகவலைதள பிரபலமாக இருந்தவர் ரவீந்தர். இவர் தன்னை எப்போதும் ஃபேட்மேன் என்று சமூகவலைதளங்களில் அடையாளப்படுத்திக் கொண்டதன் மூலமாக பிரபலமானார். இவர் சமீபத்தில் டி.வி நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். 

இது இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும். நடிகை மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் திருமணமாகி, ஒரு மகன் உள்ளான். முதல் கணவருடன் விவகாரத்து ஏற்பட்ட பிறகு, அவர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.

fatman ravindar not well

இருவருமே திருமணம் முடிந்தவுடன், தங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மையில் மகலாட்சுமி பிறந்தநாளுக்கு கூட ரவீந்தர் உருக்கமாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கையில் லெமன் ஜூஸ், டேபிளில் பிரெட் மற்றும் பழங்கள் இருக்கும் படத்தை அந்த பதிவுடன் பகிர்ந்துள்ளார். இதனால அவருக்கு என்ன ஆனது? என்று கேட்டு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

From Around the web