இன்னும் அப்படியே இருக்கும் மனோபாலா- ஐம்பது ஆண்டுகால புகைப்படம் கூறும் உண்மை..!

 
நடிகர் மனோபாலா

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை மனோபாலா எடுத்துக்கொண்ட அவருடைய இளம் வயது புகைப்பட்ம இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து பின்பு நடிகராக மாறியவர் மனோபாலா. பல்வேறு ஹிட் படங்களை இயக்கியுள்ள அவர் தமிழ் சினிமாவில் பல்வேறு நகைச்சுவை வேடங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடித்து முத்திரை பதித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய இளம் வயது புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதில் பார்ப்பதற்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்போது இருப்பது போலவே தற்போதும் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலர் அதே கண்ணாடி, அதே முடிவெட்டு, அதே ஒல்லியான தேகம் என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் மனோபாலா சினிமாவில் பரபரப்பாக இருந்த காலக்கட்டத்தில் இருந்தே யோகா செய்து வருகிறார். அதனால் தான் அவர் இளமை மாறாமல் இருப்பதாக பலரும் கமெண்டு செய்து வருகின்றனர்.

From Around the web