பிரபல திரைப்பட விமர்சகர் அபிஷேக்கிற்கு இரண்டாவது திருமணம்..!

 
1

திரைப்பட விமர்சகராக இருந்து அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அபிஷேக் என்பதும் இவர் தீபா என்பவரை திருமணம் செய்து அதன் பின் அவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இன்று நடந்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.கடந்த பிக்பாஸ் 5 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அபிஷேக் முதல் 35 ஆவது நாளில் வெளியேறினார். பின் 48 ஆவது நாளில் வைல்டு கார்டு ரவுண்டில் மீண்டும் உள்ளே வந்து 63 ஆவது நாளில் வெளியேறினார். 

யூடியூப் சேனல் மூலம் பிரபலமான அபிஷேக் திரைவிமர்சனங்களை செய்து வந்தார் என்பதும் திரைப்படங்கள் குறித்து விவாதங்களிலும் கலந்து கொண்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தான் காதலிக்கும் பெண் ஸ்வாதி நாகராஜனுடன் புகைப்படம் வெளியிட்டிருந்தார். சினிமா பையன் அபிஷேக் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தலவல்கல் வெளியாகியபடி இருந்தன. இப்படியான நிலையில் அபிஷேக் ராஜா தான் காதலித்து வந்த ஸ்வாதி நாகராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தனது திருமணம் குறித்த தகவல்களை பெரியளவில் அபிஷேக் ராஜா வெளிப்படுத்தவில்லை. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web