விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் 2-ம் கட்ட படபிடிப்பு மீண்டும் தொடங்கியது

 
1

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ‘பீஸ்ட்’  படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.  சமூக வலைத்தளங்களில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் குறித்த அப்டேட்கள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

தற்போது படப்பிடிப்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பிரமாண்ட செட்டில் விஜய்- பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சென்னை வந்த பூஜா ஹெக்டேவின் படங்கள் வெளியாகியள்ளன.

From Around the web