இறுதிக்கட்டத்தில்  பிசாசு- 2..!

 
மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு- 2’ திரைப்படத்திற்கான ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘பிசாசு’. இதனுடைய இரண்டாம் பாகத்தை தற்போது மிஷ்கின் உருவாக்கி வருகிறார். எனினும், இது முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகவில்லை.

வேறொரு கோணத்தில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, மலையாள நடிகை நமீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் பிசாசு 2 படத்திற்கான ஷூட்டிங் நடந்து வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இப்படம் குறித்து பேசிய இயக்குநர் மிஷ்கின், பிசாசு 2 படம் முற்றிலும் திகில் நிறைந்த படம். அதனால் படம் பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே அச்சப்பட வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web