படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; உயிர் தப்பிய பிரபல நடிகை..!!

 
1

2018-ல் வெளியான ‘சின்சியர்லி யுவர்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷர்மீன் அகீ (27). வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்’ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வங்கதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

11

தற்போது இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது இவர் இருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிய அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டப் படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது அவரை பரிசோதித்தபோது 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Sharmeen Akhee

தற்போது அவர் உடல் நலம் சீராக உள்ளதாகவும், அவரது ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் படப்பிடிப்பு தளத்தில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

From Around the web