ரூ.400 கோடி கிளப்பில் நுழைந்த முதல் பாலிவுட் படம்..!!

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படம் கடந்த மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்தது.
Action aur entertainment ka 💥 combo #Pathaan is getting love across the world!Book your tickets now! https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
— Yash Raj Films (@yrf) February 4, 2023
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/5VPnM9mHTY
இந்த நிலையில், தற்போது 10 நாட்கள் முடிவில் படம் ரூ.729 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ‘பதான்’ ரூ.453 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாலிவுட் படம் இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடியை எட்டியிருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.400 கோடி கிளப்பை தொடங்கி வைத்த நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றிருக்கிறார்.