வெளியானது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பின்னணி இசைக்கு பேர்போன யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து வரும் நிலையில், நிரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராக பணியாற்றியுள்ளார்.
அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. கொரோனா 2-வது அலை காரணமாக அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், வலிமை அப்டேட் கேட்டு தினந்தோறும் ட்விட்டரில் வலியுறுத்தி வரும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் அதன் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
 - cini express.jpg)