புஷ்பா படத்தில் ஃபகத் பாசில் முதல் பார்வை போஸ்டர்..!

 
அல்லு அர்ஜுன் மற்றும் ஃபகத் பாசில்

புஷ்பா படத்தில் ஃபகத் பாசிலின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக ஃபகத் பாசில், வேற்று மொழிப் படங்களில் நடிக்கவும் அதிக ஆர்வங்காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் தயாராகும் விக்ரம் மற்றும் தெலுங்கில் உருவாகும் புஷ்பா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புஷ்பா படத்தில் அவர் வில்லனாக நடிக்கும் செய்திகள் ஏற்கனவே தெரிந்துவிட்டது.
இதனாலேயே இந்த படத்தின் மீது தென்னிந்திய ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா அல்லாத மற்ற தென்னிந்திய ரசிகர்கள் பலரும் புஷ்பா படத்தில் ஃபகத் பாசில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை குறித்து தெரிந்துகொள்ள அதிக ஆர்வமுடன் உள்ளனர்.

அதை புரிந்துகொண்ட புஷ்பா படக்குழு, இன்று அவருடைய கெட்-அப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறது. அதன்படி இன்று காலை 10.08 மணியளவில் ஃபகத் பாசில் போஸ்டர் வெளியாகிறது. இது படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது.

From Around the web