தெறிக்கவிடும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
 

 
1
நடிகர் விஜய் நடித்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வௌியானது. அந்த போஸ்டரில், “எல்லா காலத்திலும் சிறந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ரசிகர்கள் தளபதி 68-ன் ஃபர்ஸ்லுக் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைராக்கி வருகின்றன.


 


 

From Around the web