சதீஷின் 'நாய்சேகர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

 
1

நடிகர் சதீஷ் தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் நாயகனாக நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு 'நாய்சேகர்' எனத் தலைப்பிட்டுப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.

'நாய்சேகர்' படத்தின் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இடையே, வடிவேலு நடிப்பில சுராஜ் இயக்கும் படத்துக்கு 'நாய்சேகர்' என்ற தலைப்பு வேண்டும் என்று ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தலைப்பைக் கொடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.

 மேலும், 'நாய்சேகர்' என்ற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டார்கள்.

From Around the web