வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!!

 
1

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

‘நாய் சேகர்’ என்ற தலைப்பிற்கு மிகப்பெரிய சண்டை நிலவியது. இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் அதற்கு முன் சதீஷ் நடிக்கும் 'நாய் சேகர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிரடியாக வெளியானது. சதீஷ் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தங்கள் படத்தின் பெயரை மாற்ற முடியாது என்று தயாரிப்பு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.


 

From Around the web