முதலில் மலையாளம்...  பிறகு தமிழ்... இப்போ  தெலுங்கு- உச்சம் தொட துடிக்கும் ரஜீஷா..!

 
ரஜீஷா விஜயன்

தமிழில் கர்ணன் படம் மூலம் அறிமுகமான மலையாள நடிகை ரஜீஷா விஜயன் அடுத்ததாக தெலுங்கில் முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் மாற்றத்தை முன்னிறுத்தி உருவான படங்களில் நடித்து கவனமீர்த்தவர் ரஜீஷா விஜயன். அதை முன்னிறுத்தி தமிழில் வெளியான கர்ணன் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

எதார்த்தமான முகம், சாந்தமான நடிப்பு என மிகவும் அமைதியாக கர்ணன் படத்தில் வலம் வந்தார் ரஜீஷா. அவருடைய நடிப்பை பார்த்த பிரபல தெலுங்கு ஹீரோ, தான் நடிக்கும் அடுத்த படத்தில் ரஜீஷாவை நாயகியாக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமாகும் நடிகைகள் தெலுங்குக்கு போவதும், அங்கு கவனமீர்க்கும் நடிகைகள் தமிழுக்கு வருவதும் எப்போது நடப்பது தான். ஆனால் ரஜீஷா விஷயத்தில் அது சீக்கரமாகவே நடந்துவிட்டது.

ஆரம்பத்தில் தமிழில் எதார்த்தமான படங்களில் நடிக்கும் நாயகிகள், அதை தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிப்பார்கள். பிறகு தான் அவர்கள் தெலுங்கு நடிக்க செல்வார்கள். ஆனால் ரஜீஷா எதார்த்தமான கதைகளத்தில் நடித்தவுடனே தெலுங்கில் அறிமுகமாகிறார்.

அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தின் கதாநாயகன் ரவி தேஜா தான். அவருடன் அறிமுகமாகும் நடிகைகள் பெரும்பாலும் ஜொலிப்பதில்லை என்கிற பேச்சு பரவலாக உள்ளது. இதை கூறி ரஜீஷாவை பலரும் அச்சுறுத்தப் பார்த்துள்ளனர். ஆனால் ரவி தேஜா படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாவதில் அவர் உறுதியாக உள்ளாராம்.

From Around the web