மாநாடு படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

 
மாநாடு திரைப்படம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிடும் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படம் தமிழக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அப்துல் காலிக் என்கிற இஸ்லாம் மத இளைஞரான சிம்பு இந்த படத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியானதை அடுத்து, மாநாடு படம் புதிய முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள விபரம் தெரிந்துள்ளது.

இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு மாநாடு படத்தின் முதல் சிங்கிள் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானார். அதனால் பாடல் வெளியீட்டு முடிவை படக்குழு தள்ளிவைத்தது.

இந்நிலையில் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதிக்கு தயாரிப்பு நிறுவனம் நாள் குறித்துள்ளது. அதன்படி வரும் 21-ம் தேதி பாடல் வெளிவருகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

From Around the web