என் கேரியரில் முதல் சக்ஸஸ் மீட்! உருக்கமாக பேசிய சுந்தர். சி

 
1

மதகஜராஜா சக்ஸஸ் மீட்டில் பேசிய சுந்தர். சி இது தான் என் வாழ்க்கையின் முதல் சக்ஸஸ் மீட் என்று உருக்கமாக பேசியுள்ளார். 

நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி என பலர் நடித்து வெளியாகிய திரைப்படம் தான் மதகஜராஜா இந்த திரைப்படம் 12 வருடம் கிடப்பில் இருந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பினை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் பட்டையை கிளப்பி வெற்றி அடைந்துள்ளது. ரசிகர்கள் ஒரு பக்கம் படத்தினை கொண்டாடி கொண்டிருக்க படக்குழு இன்று வெற்றியை கொண்டாடியுள்ளது. 

இந்நிலையில் இன்று மதகஜராஜா சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இந்த விழாவிற்கு படக்குழுவினர் ஊடகங்கள் செய்தியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். படம் குறித்து விஷால், அஞ்சலி, விஜய் ஆண்டனி ஆகியோர் பேசிய நிலையில் இயக்குநர் சுந்தர் சியும் மேடையில் உருக்கமாக பேசியுள்ளார். 

படம் தொடர்பாக பேசிய இவர் மேலும் இவ்வாறு கூறினார். " படத்தில் நடிக்கும் போது விஷால் ரொம்ப கஷ்ட்டப்பட்டான். மயங்கி எல்லாம் விழுந்துட்டாரு என்னால மறக்கவே முடியாது இது எல்லாம். இத்தனை வருஷம் கழிச்சு வெளியாகி மக்கள் இப்படி கொண்டாடுறாங்க என்றால் அதற்கு விஷால் முக்கிய காரணம்.

எத்தனையோ படம் எடுத்துட்டேன் கமிஷியல் படம் மக்கள் கூட்டம் கூட்டமா வருவாங்க பார்ப்பாங்க ஆனா படம் வெற்றி பெறாது. எனக்கு மட்டும் உள்ள ஒரு பீலிங் இருக்கும் வெற்றி இயக்குநர்கள் பெயர் லிஸ்டுல என் பெயர் வராது அது ரொம்ப கஷ்ட்டமா இருக்கும். இது என்னோட முதல் வெற்றி படம் முதல் சக்ஸஸ் மீட் என்று உருக்கமாக பேசியுள்ளார் சுந்தர் சி.

From Around the web