#FLASHBACK 2024 : பல பிரபலங்களின் வாழ்க்கையை புரட்டியெடுத்த 2024..!

இந்திய சினிமாவில் பிரபலமாக காணப்படும் நடிகர், நடிகைகள் பலர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றன.
அந்த வகையில், ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் பல வருடங்களாகவே காதலித்து வருவதாக அடிக்கடி கிசுகிசு தகவல்கள் வெளியாகும். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் இருவரும் மௌனம் காத்தனர். எனினும் எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரும் வெளிநாட்டில் டேட்டிங் செய்த போட்டோ ஒன்றை இணையவாசி ஒருவர் கசிய விட்டுள்ளார். இதை தொடர்ந்து இவர்களின் காதல் விவகாரம் பேசு பொருளானது.
இதை தொடர்ந்து ராம் சரணின் மகள் முதன்முதலாக நடை பழகியதும் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ராம்சரண் நடிப்பில் வெளியான RRR திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து அந்த படத்திற்கு பல விருதுகளும் கொடுக்கப்பட்டது.
மேலும், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நாகார்ஜுனா விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் போட்டோ எடுக்க முனைந்தார். ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளாமல் நாகார்ஜுனா சென்றுவிட்டார். அதன் பின்பு பின்னால் வந்த நாகார்ஜுனாவின் பாடிகார்ட் குறித்த மாற்றுத்திறனாளியை தள்ளிவிட்டு சென்ற வீடியோ படு வைரலானது. இதைத் தொடர்ந்து நாக அர்ஜுனாவை சந்திக்க முயன்றவர் மாற்றுத்திறனாளி இல்லை என்றும் அவர் ஏர்போர்ட்டில் வேலை பார்ப்பவர் என்றும் கூறப்பட்டது. அதன் பின்பு நாக அர்ஜுனா நேரிலேயே சென்று அவரை சந்தித்து புகைப்படம் எடுத்திருந்தார்.
சமீபத்தில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வரும்போது அங்கிருந்த படியில் சறுக்கி விழுந்தார். இந்த விடயமும் படுவைரலானது. அதேபோல ராம் சரண், நாக அர்ஜுனா, மகேஷ்பாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் ரெஸ்டாரன்ட் ஒன்றில் இணைந்து எடுத்த புகைப்படமும் படு வைரல் ஆனது.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் அஜித்குமார் கார் ரேசிங்கில் மீண்டும் கம் பேக் கொடுத்த சம்பவமும் இணையத்தை கவர்ந்திருந்தது.
மேலும் தனது திருமண டாக்குமென்ட்ரி இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான் என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் நயன்தாரா. இந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளாகி இறுதியில் தனுஷ் நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இறுதியாக தளபதி விஜய் சலார் திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்திருந்தார். இந்த புகைப்படமும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக இருந்தது.
மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக காணப்படும் ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ. ஆர் ரகுமான் ஆகியோர் தமது திருமண வாழ்க்கையில் இருந்து விலகி விவகாரத்திற்கு விண்ணப்பித்தார்கள். இதுவும் பேரதிர்ச்சியாக காணப்பட்டது. இவ்வாறு இந்த ஆண்டு முக்கிய பிரபலங்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.